பிளாஸ்டிக் பயன்படுத்துவது அவசியமானதா?

பிளாஸ்டிக் தவிர்ப்பது சுலபம்!நீங்கள் வாழும் இடத்தை அதிகம் ஆக்கிரமித்திருக்கும் பொருட்கள் என்னென்ன என்று ஒரு நிமிடம் சிந்தித்துப்பாருங்கள். பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் முதல் பாத்ரூம் மக் வரை சகலமும் பிளாஸ்டிக்ஆகிவிட்டன. மளிகை முதல், உணவு, மருந்துகள் என அனைத்தும் பிளாஸ்டிக்கில்தான் கிடைக்கின்றன. மலிவான விலையில், எளிதில் கிடைக்கக்கூடியது, எளிதில் அப்புறப்படுத்தக்கூடியது என்பதால், பிளாஸ்டிக்கின் மோசமான பின்விளைவுகளைப் பற்றி யாரும் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை.